மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 5 நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட தமிழ்நாடு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






கடந்த 24 மணி.நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)


நடுவட்டம் (நீலகிரி) 11, கூடலூர் பஜார் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 11, மேல் பவானி (நிலகிரி) 9. தேவாலா (நீலகிரி) தலா , பார்வூட் (நீலகிரி) 7, கிளென்மார்கள் (ரீலகிரி), பந்தவர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நிலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), எமரால்டு (ரீலகிரி) தலா 4 ஆட் பிரையர் எஸ்டேட் (நிலகிரி) 3, குந்தா பாலம் (நீலகிரி), (கோயம்புத்தார்), உதகமண்டலம் (நீலகிரி), கெட்டி (நீலகிரி) வால்பாறை PAP (கோயம்புத்கார்) தலா 2 வால்பாறை தானுகா அதவலகம் (கோயம்புந்தார்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), நன்னிலம் (இருவாரூர்). ஏற்காடு 5RO AWS (சேலம்). சின்கோனா (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 1.


 






குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்


Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண