சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவுநேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள்...
சென்னையில் மிக பிரதான போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை எதுவும் வருகிறது. சென்னை புறநகர் பகுதி மற்றும் சென்னையில் இணைப்பதில் மின்சார ரயில் சேவைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் வேலை நாட்கள் என எப்பொழுதுமே மின்சார ரயில்கள் பயணிகளில் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
மின்சார ரயில்களில் பயணம் செய்வது விலை குறைவு மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் மின்சார ரயில் பயணத்தை விரும்புவார்கள்.
குறிப்பாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் மிக முக்கிய வழித்தடமாக உள்ளது. தாம்பரம் வழியாக இயக்கக்கூடிய இந்த மின்சார ரயில் சேவைகள், அவ்வப்பொழுது பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும். அந்த வகையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து..
சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்
நடைபெறுவதால் இரவுநேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக , இன்று இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு தாம்பரம் கடற்கரை இடையேயான மின்சார ரயில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் நாளை இரவு -10.30, 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு சென்னை கடற்கரை மின்சார ரயில் நாளை இரவு 10.10, 11 மணிக்கு பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் நாளை இரவு 10.45க்கு கடற்கரை எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமால்பூர் சென்னை கடற்கரை ரயில் நாளை இரவு 8 மணிக்கு எழும்பூர் கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்கள் ரத்து...
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி - காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வார இறுதி நாட்களில், பயணிகள் அவதி அடைவார்கள் என்பதால் , மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.