காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அனுமந்தண்டலம் கிராமம். இங்கு பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி தனி குடியிருப்பு  பகுதி  அமைந்துள்ளது. இப்பகுதியில் எவரேனும் இறந்துவிட்டால் அவரது உடலை நல்லடக்கம் செய்ய அருகில் உள்ள செய்யாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வது வழக்கம்.

 

கடும் சிரமத்துடன் உடலை சுமந்து சென்று

 

செய்யாற்றி நீர்வரத்து செல்லும் காலங்களிலும் கால்வாயில் கடந்து உடலை சுமந்து செல்லும் அவல நிலையும், முள் மற்றும் சவுக்கு தோப்புகளில் வழியாகவே கடும் சிரமத்துடன் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து கலந்த அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுடுகாட்டு பாதை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி வருவாய் கோட்ட அலுவலகம் கிராமத்தை நேரில் ஆய்வு செய்து இடையிலுள்ள சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அதன்பிறகு தற்போது வரை எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை என்ற நிலை நீடித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து நீரோடை, முட்புதர் என ஆபத்தான நிலையிலேயே இறந்தவர் உடலை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பலர் இறந்தவர் உடல் உடன் வருவது தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து பல முறை குரல் எழுப்பியும் மனுக்களாக அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பெரும் மன வருத்தத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.

 



Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!



உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம். 


சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்