காஞ்சிபுரம் ( kanchipuram ) : காஞ்சிபுரம்மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு, சாலை தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக மாநகராட்சி குழாய் மூலம் வீடுகளுக்கு அளித்து வரும் குடிநீர் கழிவு நீர் போல வருவதாகவும் கடுமையான துர்நாற்றம் வீசி குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வந்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்நிலையில் குழாய்களில் வரும் குடிநீரை தொட்டிகளிலும் பாத்திரங்களிலும் பிடித்து வைத்தால், விஷ வாயு போல துர்நாற்றம் வீசி வருவதோடு பயன்படுத்த முடியாமலும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிப்பதற்கு குடிநீர் தான் காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால், குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும், கூட காசு கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய சூழ்நிலையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். 



 

 

குழாய் மூலம் மாநகராட்சி வழங்கும் குடி தண்ணீரை பயன்படுத்தினால், தொற்று நோய் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் குழாய் மூலம் வழங்கும் குடிநீரை சுத்தமாக வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 



 

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!








உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?


கவலையே வேண்டாம். 


சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.