Chennai Metro Ticket :மெட்ரோ பயணிகளுக்கு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் சேவை 


சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.  தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.


கட்டண தள்ளுபடி


இந்நிலையில், மெட்ரோ பயணிகளுக்கு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 


”சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டன தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.


மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.


கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் https://chennaimetrorail.org/parking-tariff/. மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Bannery) மற்றும் மெட்ரோ இரயில் நிலைய வர்கள் நிறுத்தம் பணியாளர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கட்டண விவரங்கள்


மெட்ரோ ரயில் பயண அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு  இருசக்கர வாகன நிறுத்த கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.10 ஆகவும், பயண அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




அதேபோன்று,பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு  12 மணி நேரத்திற்கு ரூ.15 ஆகவும், பயண அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.30ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் ரூ.20 ஆகவும், பயண அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக்க செய்ய வேண்டும் https://chennaimetrorail.org/parking-tariff/.   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.