2023 – 24  ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் படிக்கத் தொடங்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென Sorry சொன்னார்.

Continues below advertisement


பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும், நீட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறியும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். ஆனால், அவர்கள் பேசுவது எல்லாம் அவை குறிப்பில் ஏறாது என சபாநாயகர் அறிவித்ததால், அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


அதிமுகவினர் செய்த பிரச்னையை கண்டுக்கொள்ளாமல் தனது உரையை படித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாளையங்கோட்டை சித்தா கல்லூரி தொடர்பான அறிவிப்பை படிக்கும்போது, மாணவர் சேர்க்கை தொடர்பான புள்ளி விவரத்தை தவறுதலாக சொல்லிவிட்டார். அதனால், அதனை சரி செய்து மீண்டும் அவர் படிக்கும் முன்னர் ‘Sorry’ சொன்னார்.


அதே மாதிரி, உயர் கல்வித் துறை தொடர்பான அறிவிப்பில் குடிமைப் பணிகள் தேர்வு குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போதும் தவறுதலாக வார்த்தையை படித்ததால் இரண்டாவது முறை அவையில் ‘Sorry’ கேட்டுக்கொண்டு, பின்னர் திருத்தி படித்தார்.