மின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பட்சமாக மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கீழ்காணும் பகுதிகளில் இன்று ( பிப்.24 ) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி பகுதி :
ஆதம்பாக்கம் கருணை தெரு பார்த்தசாரதி நகர் 1 முதல் 11-வது தெரு ஆலந்தூர் டெலிபோன் எக்சேஞ்ச், பி.எஸ்.பி பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, ராமர் கோவில் தெரு, டி.ஜி.பி.நகர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், குபேரன் தெரு 1 முதல் 12-வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி காலனி மெயின் ரோடு, ராகவன் நகர்.
போரூர் பகுதி :
மங்களா நகர், கணேஷ் அவென்யூ, காவ்யா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தங்கல் தெரு, மாங்காடு பிரண்ட்ஸ் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹ்மத் நகர், ஏபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் ரோடு, அடிசன் நகர், திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வராயன் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், சிட்கோ திருமுடிவாக்கம், ஐயப்பன்தாங்கல் மேட்டுத் தெரு, தனலட்சுமிநகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்ஷன் நகர், கவுூர் சீனிவாசா நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜிநகர், குமரன் ஹார்டுவேர்ஸ் மெயின் ரோடு சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் பார்மசூட்டிகல் காலேஜ், டிரங்க் ரோடு, வடராஜபுரம் எஸ்.ஆர்.
தாம்பரம்:
ராஜகீழ்ப்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஓ.பி., காலனி, அவ்வை நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அரிக்கரை தெரு, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிழதாஸ் தெரு, எம்.ஜி.ஆர்., சாலை.
கே.கே.நகர் பகுதி :
ஆழ்வார் திருநகர், காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு.
ஆதார் எண் இணைப்பு:
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.
நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.