தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை டிச.03ஆம் தேதி சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் நிறைவடைந்தால் மதியம் 2 மணிக்கு முன்னரே மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும்.
தாம்பரம்
பெரும்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி பிரதான சாலை, புஷ்பா நகர், ரங்கநாதபுரம் பகுதி முழுவதும்
கடப்பேரி
மணிநாயக்கர் தெரு, துர்க்கையம்மன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், பாரதிதாசன் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்
கிண்டி
ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு ராமபுரம் காந்தி நகர், ராஜிவ்காந்தி நகர், சஞ்சீ அவென்யூ வானுவம்பேட்டை முத்தையல் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு
ஆதம்பாக்கம்
ஏரிக்கரை தெரு, பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை, டீச்சர்ஸ் காலனி நங்கநல்லூர் 100 அடி சாலை, கன்னிகா காலனியின் ஒரு பகுதி மடிப்பாக்கம் ஷீலா நகர், தனகல் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மேலாக.
IT காரிடார்
சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் பகுதி, கணேஷ் நகர், எம்ஜிஆர் தெரு, எழில் நகர்.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.