Metro Rail : வாவ்.. மெட்ரோ ரயிலில் இனி டிக்கெட் எடுப்பது ஈசி.. புதிய அப்டேட் என்ன தெரியுமா மக்களே?

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க மொபைல்ஃபோன் வாட்ஸ் ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் விரைவில் அறிமுகம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க  மொபைல்ஃபோன் வாட்ஸ் ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் விரைவில் அறிமுகம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஒரு வழி சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும் மற்றொன்று சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரைவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

 மக்கள் பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்பாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாக இல்லாமல், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட்டை எளிமையான முறையில் எடுக்கும் வசதி அறிமுகமாகி உள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட்

பயண அட்டை, கியூ ஆர் கோடு ஆகியவற்றை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இதில் அடுத்தக் கட்டமாக வாட்ஸ் ஆப் வாயிலாக எளிமையாக டிக்கெட் எடுக்கும் வசதி இந்த மாதம் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் கவுன்டர்களில் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்க, வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பொதுவான ஒரு எண் அறிமுகப்படுத்தப்படும். அந்த எண்ணிற்கு ஒரு மெசெஜ் அனுப்பினால் chat board என்ற முகப்பு பக்கம் தோன்றும்.  இந்த எண்ணை பயணியர் பதிவு செய்துகொண்டு, அதன் மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை வாட்ஸ் ஆப், கூகுள் பே, யு-பே மூலம் செலுத்த வேண்டும்.  கட்டணம் செல்லத்தப்பட்ட பின்பு, தங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு டிக்கெட் அனுப்பப்படும். இந்த பயணிச்சீட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள QR குறியீடு ஸ்கேனரில் காண்பித்து பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போன்று வெளியே செல்லும்போதும் QR குறியீடு ஸ்கேனரில் காண்பித்து செல்லலாம். இதன் வாயிலாக வீட்டில் இருந்து புறப்படும்போதே டிக்கெட்டை எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola