பூவிருந்தவல்லி நகராட்சியின் ஏற்பாட்டின்படி கொரோனா மாதிரியை மாட்டி வந்த நபர்கள் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தத்துருபமாக நடித்து காட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்,கோவில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையர்  ரவிச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


இதில் தலையை மறைத்து கொரோனா உருவத்தோடு வந்த நபர் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் இல்லாமல் இருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கொரோனா சங்கலி தொடர்  எப்படி பரவும் என்பதை தத்துரூபமாக நடித்துகாட்டினர்.தலையில்லாமல் வந்த கொரோனா மாதிரி உருவத்தை அணிந்துவந்த நபரால் மக்கள் கொரோனா பரவும் விதத்தை தெரிந்துகொண்டு அதிர்ச்சியுடன் கண்டு சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர் பழனி, கண்காணிப்பாளர்கள்,தூய்மை பணியாளர்களுடன் இணைந்து இந்த நாடகத்தை நடத்தினர்.


 






 


பூவிருந்தவல்லி நகராட்சி ஊழியர்கள் தலையை மறைத்து வந்த கொரோனா மனிதருடன் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தத்துருபமாக நடித்து காட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்,கோவில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையர்  ரவிச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் தலையில்லாமல் கொரோனா உருவத்தோடு வந்த நபர் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் இல்லாமல் இருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கொரோனா சங்கலி தொடர்  எப்படி பரவும் என்பதை தத்துரூபமாக நடித்துகாட்டினர்.தலையை மறைத்து வந்த கொரோனா நபரால் மக்கள் கொரோனா பரவும் விதத்தைகண்டு அதிர்ச்சியுடன் கண்டு சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர் பழனி, கண்காணிப்பாளர்கள்,தூய்மை பணியாளர்களுடன் இணைந்து இந்த நாடகத்தை நடத்தினர்.




 


தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 1,943 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,15,030 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.  






சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,138 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில்   1299 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3400 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 






நாட்டில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை முற்றிலுமாக குறையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்தார்