செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்  படுகாயம் அடைந்துள்ளார்.

கூடுவாஞ்சேரி பழைய காவலர் குடியிருப்பு


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், புதிய மற்றும் பழைய  காவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் பழைய காவலர் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில், நீண்ட காலமாக  பூட்டி இருந்த வீட்டின் பூட்டு உடைத்து. கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலர் சரவணன் வீட்டை சுத்தம் செய்துள்ளார். சரவணன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்,  போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்

 

மர்ம பொருள்


அப்பொழுது பரண் மீது சரவணன் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மேலே ஒரு பொருள் இருந்துள்ளது. அது திடீரென கீழே விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் அங்கிருந்து சரவணன் கீழே விழுந்துள்ளார். மர்ம பொருள் வெடித்ததில் காவலர் குடியிருப்பு கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆகின. அதிர்ச்சியில் மேலிருந்து கீழே விழுந்த காவலர் சரவணன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சரவணன் தற்பொழுது பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

நாட்டு வெடிகுண்டு


காவலர் குடியிருப்பில் பிடித்த மர்ம பொருள் நாட்டு வெடிகுண்டு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர் குடியிருப்பு பகுதியில் ஏன் நாட்டு வெடிகுண்டு சென்றது. யார் அங்கே கொண்டு சென்றார்கள்?  என்ற கோணத்தில் தற்பொழுது கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

 


மூடி மறைக்க முயன்ற காவல்துறை ?


நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சரவணன்  மருத்துவமனையில்  , அனுமதித்த பொழுது மேலே இருந்து கீழே விழுந்து கால் உடைந்ததாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. நாட்டு வெடிகுண்டு விழுந்ததால் தான் அவர் பரண் மேல் இருந்து கீழே விழுந்துள்ளார். ஆனால்  ஏன் நாட்டு வெடி கொண்டு  வெடித்து ,  தனியார்  காவலர் சரவணன் அனுமதித்த பொழுது, அந்த தகவலை  தெரிவிக்காமல்  மறுத்தாரா ?  என கேள்வி எழும்பியுள்ளது.


முதலில் ஒரு குண்டு மட்டும் வெடித்ததாக தகவல் வெளியாகிய நிலையில்,  அதன் பிறகு நான்கு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த   சம்பவம் தொடர்பாக   மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதால் இதை காவலர்கள் மூடி மறைக்க முயற்சி செய்தார்களா என கேள்வி எழுந்துள்ளது.


 குண்டு எப்படி வந்திருக்கும் ?


காவல் குடியிருப்பு பகுதி என்பதால்  , ஏற்கனவே அந்த தங்கி இருந்த காவலர் யாராவது ஒருவர் அங்கு நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி யாராவது வைத்திருந்தால், அவர் எதற்காக அப்படி வைத்தார் ?. இந்த நாட்டு வெடிகுண்டு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டதா ? அப்படி   வழக்கில் சம்பந்தப்பட்ட நாட்டு வெடிக்குண்டாக இருந்தால், இது போன்று குடியிருப்பு பகுதியில் வைக்கலாமா? என அடுக்கடுக்கான கேள்விகள்  எழத் தொடங்கியுள்ளது