சென்னை ராயபுரம் காமராஜபுரம் சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களை மிரட்டியதாகவும், மிரட்டல் விடுத்து பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


அங்கிருக்கும் நபர்கள் அவரை வீடியோ எடுக்கும்போது, அவர்களை பார்த்து அந்த நபர் ஒருமையில் தகாத வார்த்தைகளில் திட்டி பேசுகிறார். ’வீடியோ எடுங்க, நாளைக்கு லைவ்ல போடுங்க’ என மிரட்டும் தொனியில் பேசுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.