திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் மெயின் ரோட்டில் தனியார் K2B பவன் உணவகம் அமைந்துள்ளது. பௌர்ணமி தினத்தையொட்டியும், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் இந்த தனியார் உணவகத்தில் உணவு சாப்பிடுவிட்டு செல்வார்கள். உணவு சாப்பிட்ட பொதுமக்கள் அந்த தனியார் உணவகத்தில் தரமற்ற முறையில் உணவு இருப்பதாகவும் பல நாட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் இந்த உணவகத்தில் வழங்கும் உணவு குறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் உணவு எவ்வித பாதுக்காப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் அந்த உணவகத்தில் தொடர்ந்து தர மற்ற உணவு வழங்கி வந்ததாக தெரியப்படுகிறது. 


 




 


இந்தநிலையில் தனியார் K2B பவன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கிய புதினா மற்றும் தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி ஊர்ந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் வழங்கியுள்ளது. இதுகுறித்து உணவு வாங்கிய நபர் உணவில் கரப்பான் பூச்சி ஊர்ந்து செல்கின்றது உணவகத்தின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அதற்கு உணவகத்தின் உரிமையாளர் உணவு அப்படித்தான் இருக்கும் கரப்பான் பூச்சி உயிருடன் தானே இருக்கின்றது, அதனை எடுத்து வீசிவிட்டு சாப்பிடவும் என்று ஒருமையில் அலட்சியமாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கம் K2B பவன் உணவகத்தில் கரப்பான் பூச்சியுடன் உணவு பரிமாறிய செயல் அவசர வேலை காரணமாக வீட்டில் சமைக்க முடியாமல் உணவகத்தையே நம்பி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்று தரமற்று உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 


 




 


முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள தனியார் சைவ உணவகத்தில் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சைவ உணவகத்தில் 30 பார்சல் உணவு வாங்கியுள்ளார். அதனை வீட்டில் எடுத்து சென்று சாப்பிட்டுள்ளார். ஆனால் உணவில் வந்த பீட்ரூட்டில் எலியின் தலை இருந்துள்ளது. இதனைகண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். இதனை உணவகத்தில் சென்று கேட்டனர். அதற்கு உணவக உரிமையாளர் எந்த வித பதிலும் அளிக்கவில்லை, இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தாலும் , உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகே அதிகாரிகள் ஆய்வு செய்வது கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவகங்களில் தொடர்ந்து ஏற்படும் அவலம்