நீர்நிலைகளை பாதுக்காக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டத்திற்கு சௌமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.


1 லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா


சென்னை அடுத்த போருரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் பசுமை தாயகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ரைன்போ சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார்.




 


நிகழ்ச்சியை துவக்கி வைத்த சௌமியா அன்புமணி, தமிழ்நாட்டில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி நகர் போன்ற நகர் பகுதிகளில் காற்று மாசால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்தின் போது ஒரு மரம் அகற்றப்பட்டால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும். ஆனால் அதனை சரியாக செய்கிறார்களா என தெரியவில்லை. அதற்கான விவரங்களை கேட்டு வருகின்றோம். மரம் நடுவது என்பது இந்த காலகட்டத்தில் மிக தேவையான ஒன்று. காலநிலை மாற்றத்திலிருந்து மீட்டெடுக்க மரம் நடுவது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஒரு தனி மனிதரும் மரங்களை நட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


நீர்நிலைகளை பாதுக்காக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டத்திற்கு வரவேற்கதக்கது தான்.யார் நல்லது செய்தாலும் அதனை பாரட்ட வேண்டும். இது போன்ற செயல் நீர்நிலை பாதுகாப்பில் ஈடுபடும் பலரை ஊக்கப்படுத்தும் என்றார். மேலும் விழாவில் பங்கேற்ற, மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.




இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது : சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது ‌. மாற்று மாச காரணமாக பல்வேறு இடங்களில் மாசு துகள்கள் அதிகரித்துள்ளது . மாசு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால்தான் பசுமைத்தாயகம் சார்பில் , கிளைமேட் எமர்ஜென்சி கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் .


 




வாகன புகைகளை கட்டுப்படுத்த வேண்டும், மாசுகளை கட்டுப்படுத்த வேண்டும், ஒரு பகுதியாக ஒரு லட்சம் மரக்கன்றுகளின் நாடும் பணி தொடங்கியுள்ளது. மரங்கள் நடும்போது உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்றாலும் மரங்கள் வளர்ந்த பிறகு பலன் கொடுக்கும். சாலை விரிவாக்கம் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு மரம் வெட்டினால் பத்து மரம் வைக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. அவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு 10 மரங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என தெரிவித்தார்.