ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.
108 திவ்ய தேசங்கள்
அந்த வகையில், 108 வைணவ திருத்தலங்களில் உள்ள பெருமாளை வணங்கி வந்தால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருத்தலங்கள், 105 இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும், இரண்டு வானுலகிலும் உள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரத்தில், 15 திவ்ய தேசங்கள் அமைந்திருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் தரிசிக்க வாய்ப்பு உள்ள , 15 திவ்ய தேசங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்கள் என்னென்ன தெரியுமா ?
திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில். இத்திருக்கோயில், திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தளங்களுக்கு அடுத்ததாக முக்கியம் வாய்ந்த கோயிலாக உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. அத்திவரதர் புகழ்பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது
அட்டபுயக்கரம் - அஷ்டபூஜ பெருமாள் கோயில் திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட தளமாக உள்ளது. ஆதிகேசவன் - அலர்மேல் மங்கை . இக்கோயிலைப் பற்றி 12 பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் தெற்கே அமைந்துள்ளது.
தூப்புல் - விளக்கொளி பெருமாள் திருக்கோயில். திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட தளமாக உள்ளது. அஷ்டபூஜ பெருமாள் கோயிலில் இருந்து மேற்கில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆச்சாரியார் வேதாந்த தேசிகர் அவதாரம் செய்த திருத்தலமாக உள்ளது. தீபப்பிரகாசர் - மரகதவல்லி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
திருவேளுக்கை - அழகிய சிங்கப்பெருமாள் கோயில். இப்போயில் பேய் ஆழ்வாரால் பாடப்பட்ட தளமாக உள்ளது. விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
தருநீரகம் - உலகளந்த பெருமாள் திருக்கோயில் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. ஜகதீசப்பெருமாள் - நீலமங்கை வள்ளி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
திருப்பாடகம் - பாண்டவர் தூது பெருமாள் கோயில். கிருஷ்ணர் இத்தளத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்குறளில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாக உள்ளது. மூலவர் பாண்டவர் தூதர் - தாயார் சத்தியபாமா ருக்குமணி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
திருநீலாத்தீங்கள் துண்டம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் அமைந்துள்ளது. சைவ கோயிலுக்குள் பாடல் பெற்ற திருமால் கோயில் இருப்பது , அரிதான ஒன்று. நிலாதிங்கள் துண்டத்தான் - நேரோருவரில்லாவல்லி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
திருஊரகம் - காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோயில். மூலவர் உலகளந்தார் பெருமாள் - தாயார் அமிர்தவல்லி ஆகியோர் வாக்களிக்கின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
திருவெக்கா - சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ( யதோத்த காரி பெருமாள் கோயில் ). பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமங்கை, திருமழிசை, நம்மாழ்வார் ஆகியோர் மங்கள சாசனம் செய்துள்ளனர். யதோத்தகாரி - கோமளவல்லி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
திருக்காரகம் - உலகளந்தார் பெருமாள் கோயிலில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. மூலவர் கருணாகரர் பத்மினி தாயார் காட்சியளிக்கின்றனர் .
திருக்கார்வானம் - காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோவிலில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. மூலவர் கள்வர் பெருமாள் - கமலவல்லி தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
திருக்கள்வானூர் - காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கருவறைக்கு முன் அமைந்துள்ளது. கோயில்களில் பாடல் பெற்ற திருமால் கோயில் இருப்பது இரண்டு இடத்தில் தான். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். இத்தலம் திருமங்கை ஆழ்வாரளால் பாடல் பெற்ற தலமாக உள்ளது.
திருப்பவள வண்ணம் - காஞ்சிபுரம் பவள வண்ணார் பெருமாள் கோயில் , கோயில் காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் அமைந்துள்ளது. மூலவராக பவள வண்ணப் பெருமாள் - தாயார் பவளவல்லி நாச்சியார் காட்சியளிக்கின்றனர்.
திருப்பரமேச்சுர விண்ணகரம் - காஞ்சிபுரம் வைகுண்ட ராஜா பெருமாள் கோயில். திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தளமாக உள்ளது. மூலவராக வைகுண்ட பெருமாள்-தாயாராக வைகுண்ட வல்லி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
திருப்புட்குழி - விஜயராகவ பெருமாள் கோயில். மூலவராக விஜயராகவன் மற்றும் மரகதவல்லி தாயார் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். இக்கோயில் பாலு செட்டி சத்திரம் அருகே, சென்னை வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள ஜடாயு தீர்த்தம் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது.