கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதமான  பல்லாவரம்-குன்றத்தூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் நீண்டகால திட்டம் வேகம் பெற்றுள்ளது.தற்போதுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Continues below advertisement

பல்லாவரம்-குன்றத்தூர் சாலை: 

சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் ஆகிய இடங்களை சுற்றி ஏராளமான கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்ப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் பூந்தமல்லி செல்ல பிரதான சாலையாக இருப்பது பல்லாவரம்-குன்றத்தூர் நெடுஞ்சாலையாகும். இந்த சாலை தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் இந்த சாலை நெரிசலாகவே இருக்கும். இதனால் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டுமேன நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வந்தது. இதனால் இந்த சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்தினாலும் சில காரணங்களால் சாலை பணிகள் தொடங்காமலே இருந்தது.

இணைப்பு சாலை:

இந்த சாலையில் தற்போது அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் இடையேயாக 4 கி.மீ தூரத்தை கடக்க  தற்போது சுமார் 35 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இதனால் சாலையை விரிவாக்கப்படுத்த வேண்டுமேன பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சாலை குன்றத்தூரில் உள்ள கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு ஒரு முக்கிய இணைப்பு சாலையாகவும் மேலும் இது ஸ்ரீபெரும்புதூர் வரை நீண்டுள்ளது.

Continues below advertisement

ஜிஎஸ்டி சாலை- பெங்களூரு நெடுஞ்சாலை இணைப்பு

பல்லாவரம் - குன்றத்தூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை 13 கி.மீ நீளத்திற்கு ஜிஎஸ்டி சாலையையும் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையுடன் கோடம்பாக்கம் சாலை வழியாக இணைக்கிறது, மேலும் இது சென்னை பைபாஸ், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் பிற உட்புற பகுதிகளுக்கும் இணைப்பை வழங்குகிறது. எனவே, 6.8 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையில் ஜிஎஸ்டி முதல் கோடம்பாக்கம் சாலையில் குன்றத்தூர் சந்திப்பு வரை  1.5 கி.மீ.க்கும் இடைப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது.

விரிவாக்கப்பணிகள் தொடக்கம்:

தற்போது பயன்பாட்டில் உள்ள இருவழிச் சாலை 9 முதல் 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது/இந்த சாலையை 24 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநாகேஸ்வரம், மஞ்சேரி மற்றும் குன்றத்தூர் பி ஆகிய ஆறு வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் முடிந்ததும் சாலை பணிகள் தொடங்கும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமும் போக்குவரத்து நெரிசல்:

இந்தப் பகுதியில் நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலை  சந்திக்க நெரிடுவதாகவும் வேலை நேரங்களில்  போக்குவரத்து நெரிசல்  3-4 கி.மீ வரை நீடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். "நிலம் கையகப்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாகவும், சாலையோரக் கடைகளால் உள்ள ஆக்கிரமைப்பு ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திட்டமிட்டப்படி நெடுஞ்சாலைத் துறை 2014 ஆம் ஆண்டிலேயே இந்த சாலை விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியிருந்தால், தற்போது இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து இருக்கும்" என்று குன்றத்தூரை சேர்ந்த மென் பொறியாளாரான கோகுல் என்பவர் தெரிவித்தார்,