Chennai water reservoir: சென்னை குடிநீர் தேவைக்காக கோவளம் பகுதியில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. 

சென்னை மாநகராட்சி மிகவும் வளர்ந்த நகரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருப்பதாக சென்னை மாநகராட்சியில் அனைத்து வித அடிப்படை வசதிகளையும், செய்து தரவேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை மாநகராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் நிலத்தடி நீரும் வேகமாக சரிந்து வருகிறது. இந்த ஆண்டு கூட கடந்த மூன்று மாதத்தில் 16 அடி வரை நிலத்தடி நீர் குறைந்திருப்பதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. 

சென்னையில் உள்ள நீர் ஆதாரங்கள் என்னென்ன ?

சென்னை குடிநீர் தேவைக்காக ஆறு இடங்களில் நீர் தேக்கங்கள் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம், புழல் நீர்த்தேக்கம் ஆகியவை சென்னை குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

அதேபோன்று பல்வேறு நீர் ஆதாரங்கள் மற்றும் கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டத்தின் மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் , செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது.

கோவளத்தில் புதிய நீர்த்தேக்கம் - Kovalam New Water Reservoir 

குடிநீர் தேவையை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய நீர் தேக்கம் அமைப்பது காலத்தின் கட்டாயமாக இருந்து வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, கோவளம் பகுதி புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. 

குறிப்பாக, சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டால், மிகப்பெரிய அளவில் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2035 ஆண்டுக்குள் சென்னையின் குடிநீர் மற்றும் தொழில்துறை நீர் தேவை 34 டி.எம்.சியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதிலிருந்து நீர் தேக்கங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் 1.6 tmc அடி கொள்ளளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. சுமார் 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நீர் தேக்கம் கட்டப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர் மழை மற்றும் வெள்ள நீரின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி இந்த நீர் தேக்கம் அமைக்கப்பட உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடையே அரசு நிலத்தில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பணிகள் தொடங்குவது எப்போது ?

தமிழக அரசின் உப்பு கழக நிறுவனத்திற்கு சொந்தமான 4375 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் துவங்கப்பட்டால் கட்டுமான பணிகள் மூன்று ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்த்தேக்கம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு உடனடியாக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. சுற்றுச்சூழல் அனுமதிகோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.