கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging )
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வந்தது.
சுறுசுறுப்பாக நடைபெறும் பணிகள்
இறுதி கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தினசரி இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளில் அன்றாட பணிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முகப்பில் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஒரு சில பணிகள் மட்டுமே என்று உள்ளதால் , அந்த பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளது. அதேபோல , ஐய்யன்சேரி இணைப்பு சாலை நல்லம்பாக்கம் இணைப்பு சாலை பணிகளும் 90% முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை முடித்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள், கட்டமைப்புகளை ஒப்படைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இறுதிக்கட்ட பணிகளை தினசரி கவனித்து வருவதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வருமா ?
இதனால் 2024 பொங்கல் பண்டிகையின் பொழுது வெளியூர் செல்பவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையத்தை பராமரிக்க என்ன திட்டம்? ( Kilambakkam Bus Terminus )
கிளாம்பாக்கம் பணிகள் நிறைவடைந்தாலும், செயல்பாட்டுக்கு வருவதற்கான முன்னெடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் டெண்டர் மூலமாக , தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிலையம் பராமரிப்பு மாதிரியாக எடுத்துக்கொண்டு, சுகாதாரமான பேருந்து நிலையமாக கிளம்பாக்கம் செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெண்டர் மூலமாக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வளாகத்தை இயக்கி பராமரிக்க, கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம், விளம்பரங்கள் போன்ற இதர வழியில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.