காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்கள் மற்றும் உற்பத்தி ஊழியர் ஆண் மற்றும் பெண் இருபாலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது, சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா ( Smile Skills India ) பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண்  மற்றும் பெண் இருபாலருக்கும் ( Smart Phone Assembly Technician (Female only) and Assembly Operator Program (Male and Female) போன்ற பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.


தர சான்றிதழ்
 
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த  18 முதல் 35 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு (SSC Approval Certificate and Course Graduation Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். 


தனியார் நிறுவனங்கள் 
 
மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் (Salcomp, Foxconn, Flex Electronics Kanchipuram , Chennai) போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000/- முதல் ரூ.18,500/- வரை பெற வழி வகை செய்யப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி ?


இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிக் கட்டணம் தாட்கோ வழங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.