கூடுதல் கட்டணம் வசூல் புகார் தொடர்பாக, சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்த மூன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களை கொண்ட 15 அதிகாரிகள் பயணக் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.


தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால்  போக்குவரத்துத்துறை  அதிகாரிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பர் என  துறையின் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்த நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் பயணியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை நடத்துநரிடம் பெற்று பயணியரிடம் ஒப்படைத்தனர்.  


இணைய வழியில் 2100 ரூபாய்க்கு  பயணச்சீட்டு முன்பதிவு செய்து கோயம்பேட்டிலிருந்து சாத்தான்குளம் பயணித்த பயணியிடம் கூடுதல் தொகையான 700 ரூபாயை நடத்துநரிடம் பெற்று பயணியிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீவைகுண்டம் பயணித்த பயணி ஒருவர் இணையவழியில்  ரூ.1750க்கு   முன்பதிவு செய்திருந்த நிலையில் கூடுதல் தொகையான 500 ரூபாய் பேருந்து நடத்துநரிடம் வசூலிக்கப்பட்டு பயணியிடமே வழங்கப்பட்டது. 


கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில், ஒரு வட்டார போக்குவரத்து ஆய்வாளருடன் சேர்த்து தலா மூன்று அதிகாரிகளைக் கொண்ட 5 குழுவினர் பயணச் சீட்டுக் கட்டணம் தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டனர்.


ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரன், பயணியரிடம் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை நடத்துநரிடம் பெற்று பயணியரிடம்  ஒப்படைக்கப்படும். பண்டிகை , விடுமுறை போன்ற பயணியர் கூட்டம் இல்லாத  வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் தொகையை  கணக்கிட்டு அதன் அடிப்படையில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தீர்மானிப்போம். உதாரணத்திற்கு திருநெல்வேலிக்கு 1300 ரூபாய் வரை வசூலிக்க அனுமதி உண்டு. கூடுதல் தொகை வசூலிக்கும் பேருந்துகளுக்கு 2000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.


 




 

 


"ஆசாதி கா அமிர்த மஹோத்சவ்""சுதந்திரதிருநாள் அமுதப்பெருவிழா"

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையும் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை பறை சாற்றும் மீண்டும் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இது வரும் 18 ந் தேதி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள நிகாம் ராணுவ கனரக வாகனங்கள் உற்பத்தி மற்றும் படை உடை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் ஆவடி  அனைத்து  உற்பத்தி பாகங்கள் அதிநவீன இயந்திரங்கள் வரை பொது மக்கள் இலவசமாக  ஆண்டுகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கனரக வாகனங்கள் உற்பத்தி நிறுவன பொது மேலாளர் சஞ்சய் கிஷோர் ரிப்பன் வெட்டி பொது மக்கள் பார்வைக்கு துவங்கிவைத்தார். இதில் ஆவடியில் உற்பத்தி செய்யும் ராணுவ கனரக வாகனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் இதர பாக உற்பத்தி பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு மாலை 3 மணிக்கு 7 மணி வரை நடைபெறுகின்றது. இது வரும் 18ம் தேதி வரை  இந்த சிறப்பு வாய்ந்த கண்காட்சி நடைபெறுகிறது.

 

இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக  விளங்கும் அதிநவீன பீரங்கி மற்றும் டாங்கிகள் கண்காட்சியும்  நடைபெறுகிறது . கண்காட்சியில் அஜெயா-டி-72, பீஸ்மா-டி-90, வருண் எம்கே ஐ மற்றும் பிரிட்ஜ் லேயர் டேங்க் (பிஎல்டி)-டி72 ஆகியவை அதிநவீன பீரங்கிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் கியர் பாக்ஸ், என்ஜின்கள், டிராக் வீல்கள் உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1300 உதிரி பாகங்கள்  பீரங்கிகளின் பல்வேறு  பாகங்களும் இந்த கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள. இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியைக் காண பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை காண அழைப்பு விடுத்துள்ளனர். ராணுவ உயர் அதிகாரிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.