காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் கூடுதல் மானிய கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்


இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில்   படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்கத்தின் அடிப்படையில் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டமானது ஏற்டுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கி கடன் பெற பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி என கல்வித் தகுதி தளரவு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.




இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75.00 லட்சம் மானியமும் மாற்றுதிறனாளிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியமும், வங்கிகள் கொடுக்கும் கடனுக்காக வட்டியில் 3 சதவீதம் மானிய உதவியும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


வரம்புகள் என்னென்ன ?


இத்திட்டத்தில் தொழில் முனைவோரின் தொழில் திட்ட தொகை குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்திற்க்கு மேல் இருக்க வேண்டும், அதிக பட்ச கடன் தொகை ரூ.5 கோடி வரை ஆகும். கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப் படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி (ஐடிஐ)/ தொழில் பயிற்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.




பொது பிரிவினருக்கு வயது 35 – க்குள் இருக்க வேண்டும். பெண்கள்/தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர்/பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/திருநங்கையர்/மாற்று திறனாளர்கள்/முன்னாள் இராணுவத்தினர் வயது 45 – க்குள் இருக்கவேண்டும். மருத்துவமணைகள், பிசியோதரபி மையங்கள், மருத்துவ ஆய்வங்கள், கட்டுமான உதவி பொருட்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் நிலம் அகழ்வி (எர்த் மூவர்ஸ்) வாடகைக்கு விடுதல் ஆகிய சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கடன் உதவி அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். இத்திட்டத்தில் கடனுதவி பெறும் நபர்களுக்கு இணையதளம் வழியே தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.


50 சதவீதம் பெண்கள்


இத்திட்டத்தில் 50 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகள் உடைய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பெற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி அல்லது 044-2723883727236686272385519566990779 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என   டாக்டர்ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண