Beef Biriyani : சென்னையில் நடைபெற்று வரும் சிங்கார சென்னை உணவுத்திருவிழா 2022ல் பீப் பிரியாணி அரங்கு அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் உள்ள பிரபலமான தீவுத்திடலில் உணவுத்திருவிழா 2022 நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழாவை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்த உணவுத்திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தபோது பீப் பிரியாணி அரங்குகள் மட்டும் இடம்பெறவில்லை. சிக்கன், மட்டன் பிரியாணி அரங்குகள் இடம்பெற்ற இடத்தில் பீப் பிரியாணி அரங்கு இடம்பெறாதது பலருக்கும் பெரும் வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
பீப் பிரியாணி ஸ்டால் அமைக்க யாரும் அனுமதி கோராத காரணத்தால்தான் பீப் ஸ்டால் அமைக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இந்த சூழலில், உணவுத்திருவிழா விவகாரத்தில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
மேலும் படிக்க : Koyambedu Bustand Rush: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை...! சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் அலைமோதும் கூட்டம்..!
இதையடுத்து, சென்னை உணவுத்திருவிழாவில் பீப் ஸ்டாலுக்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது, தற்போது மூன்று பீப் பிரியாணி அரங்குகள் அமைக்க அனுமதி கோரப்பட்ட காரணத்தால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை உணவுத்திருவிழாவில் பங்கேற்று பீப் பிரியாணியை தானும் சாப்பிட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடைபெற்ற மாட்டிறைச்சி தொடர்பான குற்றச்சம்பவங்களுக்கு எதிராக ஏராளமான கண்டன குரல்களை எழுப்பிய தி.மு.க.வின் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டின் தலைநகரில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி நடைபெறாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Breaking: சென்னை விமானநிலையத்தில் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் சிக்கியது- அதிர்ச்சியில் அதிகாரிகள்
மேலும் படிக்க : பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 சதவீதம் கூடுதல் மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்