சென்னை : 18வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு மொபைல் ரீசார்ஜ், சர்வீஸ் செய்ய மாட்டோம் என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியஷன் தெரிவித்துள்ளது. நவீன உலகில் செல்போன் பயன்பாட்டால் குற்றங்களும், விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு மோசமான நிலைமையை நோக்கி நகர்த்தி செல்கிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டால் உயிரிழப்பு நிகழ்ந்து வருவதும் வாடிக்கையாகி விட்டது.
Melmaruvathur Temple Encroachment : ஆக்கிரமிப்பில் மேல்மருவத்தூர் அடிகளார் மண்டபம்: நாளை அகற்றம்!
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், காவல்துறை தரப்பும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்த போதிலும், மாணவர்களிடையே செல்போன் மோகம் குறைந்த பாடில்லை. இந்நிலையில், செங்கல்பட்டில் இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முன்னெடுப்பு நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டாம் என அதன் அசோசியேஷன் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடை உரிமையாளர்கள் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Chidambaram Temple : சிதம்பரம் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு..தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு..நடந்து என்ன?
அதில் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு பெற்றோரின்றி தனியாக வரும் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் செல்போன் சர்வீஸ் செய்து கொடுக்கபடாது. மேலும் பில் இல்லாமல் கொண்டுவரப்படும் செல்போன்களை வாங்க மாட்டோம் எனவும், மாவட்டம் முழுவதும் ஒரே பொருள், ஒரே விலை திட்டத்தில் அனைத்து கடைகளில் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. மாணவர்களிடையே செல்போன் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், இதுபோன்ற விழிப்புணர்வுகளை வியாபாரிகளும், வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்