புத்தாண்டை ஒட்டி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'புத்தாண்டு அன்று பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு அன்று மாலை முதல் தாம்பரம் மாநகரத்தில் சுமார் 3,500 காவல்துறையினர், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணி, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேம்பாலத்தினை புத்தாண்டு அன்று இரவு உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது. நீச்சல் குளம் மற்றும் மொட்டை மாடியில் எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதிக்கக் கூடாது'. கண்காணிப்பு கேமராக்கள் பொருந்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அனுமதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்
அவசர உதவி தேவைப்படுபவர்கள் கட்டுப்பாட்டு அறை தாம்பரம் மாநகர காவல் தொலைபேசி எண் 044 2450 5959 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தாம்பரம் மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. என தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்