தற்போது சென்னையில் 15,000 வாகன ஓட்டுனர்கள் இணைத்துள்ள நம்ம யாத்ரி செயலியில் 3 மாதங்களில் 50000 பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நம்ம யாத்ரி செயலி 


மற்ற செயலிகள் போல் அல்லாமல் நம்ம யாத்ரி செயலியில் கட்டணம் நேரடியாக ஒட்டுனர்களை சென்றடைவதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேவை கிடைக்கிறது. விரைவான முன்பதிவுகள், குறைவான ரத்து கட்டணம்,  உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் நிறைவான சேவை வழங்கும் நம்ம யாத்ரி, இந்தியாவின் மிகப்பெரிய ஓப்பன் மொபிலிட்டி செயலியாகும். 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நம்ம யாத்ரி  இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்திய முதல் செயலியாக திகழ்கிறது.


ஓட்டுனர்களுக்கு விலை உயர்வு உள்ளிட்ட வாழ்வாதார சிக்கல்கள் ஏற்படும்போது நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து ஓட்டுனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் நம்ம யாத்ரி செயலி செயல்படும். முதன்முறையாக, சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கேப் மற்றும் டாக்சி தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி இந்த வெளியீட்டுக்கு ஆதரவளித்துள்ளன. 


இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.   நம்ம யாத்ரி செயலியின் இந்த அறிமுக விழாவில் சி ஐ டி யு பொதுச் செயலாளர் வி. குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உரிமைக்குரல் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜாகிர் உசேன், உரிமை கரங்கள் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெற்றிவேல்,  ஆல் டிரைவர் யூனியன் ரைட் அசோசியேஷன் பொதுச்செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 கௌரவ விருந்தினர்களாக சிகரம் ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர்  டில்லி பாபு மற்றும் புதிய அக்னி சிறகுகள் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


 தொழிற்சங்கத் தலைவர்கள் நம் யாத்ரியின் நேர்மறையான தாக்கத்தையும் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தனர். சீரோ கமிஷன் மற்றும் வெளிப்படைத் தன்மை மூலம் சேவை தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுத்துகொண்டனர். 


 உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த  ஏ. ஜாஹிர் ஹுசைன் உரையாற்றும்போது, நம்ம யாத்ரி செயலியில் சென்னையில் வாகனங்களை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி என்றும், ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக நிற்பதாகவும் தெரிவித்தார். 


நம்ம யாத்ரியைச் சேர்ந்த ஷான் எம் எஸ்  தெரிவிக்கையில், "நம்ம யாத்ரி என்பது வெறும் செயலி அல்ல என்றும் இது சென்னையின் பெருமை மற்றும் மக்களுக்கான முதல் இயக்கம்” என்றும் கூறினார். ஒரு திறந்த மற்றும் நியாயமான தளமாக, ஒரு இணக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார். 
 
ONDC ஐச் சேர்ந்த பாலாஜி  நம்ம யாத்ரி ONDC இன் பணிக்கு ஒரு சான்று என்றார். சென்னை ஓட்டுநர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முழு ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 


ரூபாய் 550 கோடி வருவாய்


நம்ம யாத்ரி,  62 லட்சம் வாடிக்கையாளர்களையும், 3.3 லட்சம் ஓட்டுநர்களையும் கொண்டுள்ளது. இதுவரை
3.6 கோடி பயணங்களை முடித்து, ஓட்டுநர்கள் கமிஷன் இல்லாமல் ₹550 கோடி வருவாய் ஈட்ட ஓட்டுநர்களுக்கு உதவியுள்ளது.


இந்த பிப்ரவரியில் சென்னையில் ஆட்டோ சேவையை துவக்கி, 2.7 லட்சம் பயணங்களை அடைந்து, ரூ.4 கோடி ஈட்டியுள்ளது. சென்னையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்தை நோக்கி நம்ம யாத்ரி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.