கடந்த சனிக்கிழமை சென்னையில்  இந்திய இராணுவத்திற்கான கேடட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நடைபெற்ற விழாவை மாலத்தீவு பாதுகாப்புப் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் மதிப்பாய்வு செய்தார். இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்ட கேடட்களில் ஒருவர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஸ்மிதா சதுர்வேதியின் மகன். இதில் சிறப்பு என்னவென்றால் இவரும் இதே சென்னை பயிற்சி முகாமில் இருந்துதான் கேடட்டாக தேர்வு செய்யப்பட்டவர். அதே போலவே இவரது மகனும் தேர்வாகியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.







27 வருடங்களுக்கு முன்பு , அதாவது 1995 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இருந்து மேஜர் ஸ்மிதா சதுர்வேதி கேடட்டாக நியமிக்கப்பட்டார். இன்று அதே அகாடமியில் தனது மகன், அதே முறையில் பணியமர்த்தப்படுவதை ஸ்மிதி பெருமிதத்துடன் கண்டிருக்கிறார். இது  சென்னையின் பாதுகாப்புப் பிஆர்ஓ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு , வரவேற்பை பெற்று வருகிறது.






இது குறித்து மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஓய்வு) புகழ்பெற்ற அகாடமியில் கேடட்டாக இருந்த தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்தார். ”நாங்கள் பயிற்சி எடுத்த நாட்களில் இருந்து பார்க்கும் பொழுது இப்போது நிறைய மாறிவிட்டது. நிறைய கட்டிடங்கள் வந்திருக்கிறது. உணவு விடுதிகள் , தங்கும் விடுதிகள் என எல்லாமே மாறிப்போயிருக்கிறது. எனக்கு இது ஒரு நாஸ்டாலஜிக்காக இருக்கிறது. தேர்வான கேடட்ஸிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் “ என்றார்