44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மூன்றாவது நாளாக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். போட்டி நடைபெறும் இடத்தில் சென்று போட்டி நடத்தும் அதிகாரிகளிடம் நேரடியாக, வசதிகள் எப்படி உள்ளது வேறு ஏதாவது குறைகள் உள்ளதா என கேட்டு தெரிந்து கொண்டார் .
மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வீரராக பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ராண்டா செடர் என்கிற எட்டு வயது சிறுமி செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
யார் அந்த ராண்டா செடர்
மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வீரராக பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ராண்டா செடர் என்கிற எட்டு வயது சிறுமி செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று ஒலிம்பியாட் போட்டியில் தனது முதலாவது ஆட்டத்தில் விளையாடிய அந்த இளம் வீராங்கனை முதல் கேமில் வெற்றியை பதிவு செய்தார்.
நாஜி சீகர் இவர் தான் பாலஸ்தீன பொது ( ஓபன்) அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஐந்து வயது முதலே செஸ்ஸின் மீது ஆர்வம் உடைய சிறுமி செஸ் கற்றுக் கொண்டு விளையாடி வந்துள்ளார். பாலஸ்தீன நாட்டில் நடைபெற்ற மகளிர் காண செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தது தொடர்ந்து, சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் .
எட்டு வயது சிறுமி பாலஸ்தீன மகளிர் அணி பிரிவில் பங்கு பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியிலும் சிறுமி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான சூழலில் செஸ் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொள்வதே வழக்கமாக உள்ள நிலையில் தங்கள் நாட்டில் , துப்பாக்கி மற்றும் பீரங்கி சத்தங்கள் இடையே பயிற்சி மேற்கொண்டதாக அந்நாட்டு வீராங்கனைகள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்