வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்ட பொருட்கள், சட்டவிரோதமாக தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகியவற்றை விமான நிலையங்கள் வழியாக பலரும் இந்தியாவிற்கு கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




கொரோனா பறிமுதல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போதியளவு விமானங்கள் இயக்கப்படாத காரணத்தால், விமான நிலையங்கள் வழியான கடத்தல் சம்பவங்கள் குறைவாகவே நடந்துள்ளது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் நாட்டில் அதிகளவில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.


சென்னை :




2021-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ 109 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு குறைவாகவே உள்ளது. கடந்தாண்டில் 151 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 392 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018-ஆம் ஆண்டு 328 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு 184 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோழிக்கோடு :




2021ம் ஆண்டில் அதிக கடத்தல் தங்கம் பிடிபட்டதில் இரண்டாவது இடத்தில் கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் அங்கு 128 கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு 147 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 262 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 219 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 133 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


டெல்லி :




நாட்டின் தலைநகரான டெல்லியில் நடப்பாண்டில் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மட்டும் 88 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு நாட்டிலே அதிகபட்சமாக 494 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2018ம் ஆண்டு 453 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 385 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  


மும்பை :




நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பையில் நடப்பாண்டில் 31 கிலோ தங்கம் மட்டுமே கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு 87 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 403 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. 2018ம் ஆண்டு 763 கிலோ தங்கத்தை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர். 2017ம் ஆண்டு 462 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருச்சி :


திருச்சி விமான நிலையத்தில் 2021ம் ஆண்டில் மட்டும் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு 76 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 129 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 62 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


கொச்சின் :


2021ம் ஆண்டு கொச்சின் விமான நிலையத்தை 62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 79 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். 2019ம் ஆண்டு 132 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 197 கிலோ தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. 2017ம் ஆண்டு 94 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.


இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய நிதியமைச்சகத்தால் ராஜ்ய சபாவில் அளிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.