விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பு பொது மக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. காவல்துறைசார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.


Kanimozhi Vs Udhayanidhi Stalin : உதயநிதி vs கனிமொழி.. மீண்டும் திமுகவில் உருவாகும் வாரிசு யுத்தம்!




சாலையில் கன்றை ஈன்ற பசு - சொந்தம் கொண்டாடும் இருவரால் திண்டாடும் காவல்துறை


விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த விபத்துகள் தொடர்பாக  வெளியான தகவல்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டை பொறுத்தவரையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 2,046 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 442 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,902 பேர் காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.


Seeman on DMK Govt: மோடி விருந்தாளியா? அடுத்து காவிக்கொடிதான்! திமுகவை தாக்கிய சீமான்




கடந்த 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் மாவட்டத்தில் நடந்த 1,926 சாலை விபத்துகளில் 438 பேர் உயிரிழந்ததுள்ளனர். 2,087 பேர் காயம் அடைந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 120 சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதோடு உயிரிழப்புகள் எண்ணிக்கையும் 4 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 185 ஆக சற்று குறைந்துள்ளது.


மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை



வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் தாறுமாறாகவும், அதிவேகமாக செல்வதாலும்தான் தொடர் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. எனவே பிறக்க இருக்கிற 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளை மேலும் குறைக்கும் வகையிலும், விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Kerala Night Curfew: கேரளாவில் இரவு ஊரடங்கு: ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஆஃபர் கொடுத்த அரசு!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண