கடந்த தீபாவளிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதையடுத்து, டிசம்பர் மாதம் முழுவதும் ஓரளவு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது.  பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. 






















இந்த நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் “மத்திய சென்னையில் கடுமையான மழை பெய்துள்ளது. நுங்கப்பாக்கம், தி நகர் போன்ற பகுதிகளில் 15 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. சென்னை கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருகிறது. கிழக்கு பக்கத்தில் இருந்து வரும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மழை மேகங்கள் சென்னை கடற்கரை ஓரங்களிலேயே மழையாக பெய்கிறது” என்றார்