சென்னையில் தொலைந்து போன சிறுவனை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டுக்கொடுத்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
காணும் பொங்கல்:
நேற்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, இதனால் சுற்றுலா தளங்களில் பொது மக்கள் அதிகம் இருந்தது. சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களான மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பெசண்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் நேற்று(16.01.25) காலை முதலே கூட்டம் அலை மோதியது.
தொலைந்து போன சிறுவன்:
இந்த நிலையில் நேற்று மாலை தாம்பரம் ரயில் நிலைய பகுதியில் சுற்றித் திரிந்த 5 வயது சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் ( தடம் எண்: 31 G) ஏறிப்பயணித்துள்ளான், சிறுவன் தனியாக இருப்பதை கவனித்த ஓட்டுநர் வீரமணி உடண்டியான குரோம்பேட்டை பணிமனை- கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த எம்டிசி ஊழியர்களும் அங்கிருந்த விசாரிக்க தொடங்கினர், அப்போது ஒரு மூதாட்டி தன் சிறுவனை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: "சனாதன விழுமியங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஆன்மீகம்" சொல்கிறார் துணை ஜனாதிபதி!
40 நிமிடங்களில் மீட்பு:
பின்னர் அந்த பாட்டி மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் சேகரித்ததும், எம்டிசி ஊழியர்கள் டிரைவருக்கு தகவல் தெரிவித்து பேருந்தை தாம்பரம் கேம்ப் ரோட்டில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர். சிறுவனின் குடும்பத்தினர் அங்கு வந்து சேலையூர் போலீசார் முன்னிலையில் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும் சிறுவனை பற்றி சரியான நேரத்தில் தகவல் கொடுத்த ஓட்டுநர் வீரமணி மற்றும் நடத்துநர் சிங்கை பூபதி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தொலைப்போன சிறுவனை 40 நிமிடங்களில் மீட்டுக்கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.