Just In





Gold Rate Increase; இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. தற்போது, தங்கம் விலை 59,000-ஐ கடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறத. அது பெரும்பாலும் ஏறுமுகத்தில்தான் உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை ரூ.59,000-ஐ கடந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை
புத்தாண்டு பிறந்தது முதலே தங்கம் விலை பெரும்பாலும் ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. சில நாட்களில் மட்டும் சொற்ப அளவு குறையும் தங்கம், அதன் பின், பல மடங்காக விலை உயர்ந்துவிடுகிறது. புத்தாண்டு பிறந்து, 3ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதன்பின், 4ம் தேதி ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,720 ஆக இருந்தது. அதன்பின், 7ம் தேதி வரை அதே விலையில் நீடித்த தங்கம் விலை, 8ம் தேதி ரூ.80-ம், 9ம் தேதி ரூ.280-ம், 10-ம் தேதி ரூ.200-ம், 11-ம் தேதி ரூ.240-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,520 ரூபாயாக இருந்தது. 12 தேதி அதே விலையில் நீடித்த தங்கம் விலை, 13ம் தேதி சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில், 14ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. பின்னர் 15ம் தேதி மீண்டும் 80 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை
இந்த நிலையில், இன்று(16.01.25) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, 59,000 ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,390 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து, ரூ.59,120-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்வு
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.103 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை, மீண்டும் 59,000 ரூபாயை கடந்துள்ளதால். இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.