கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


சென்னை மாதவரம் நடசேன் நகர், நேரு தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ச்சியாக மாதவரம் வேணுகோபால் நகரில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரக்கூடிய திருப்பணிகளையும், அந்த கோயிலின் குளத்தையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணியின் போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ;


ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய குடமுழக்குகளை முறையாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,363 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கிறது. இன்று மாதவரம் சட்டமன்றத்தில் இருக்கிற மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் அந்த திருக்கோவிலுக்கு புதிதாக திருக்கோவில் கட்ட வேண்டும் என ஒரு மக்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.  


இதற்கு உயர்மட்ட  தொல்லியல் துறையும் திருக்கோவிலுக்கு உண்டான அனுமதியை வழங்கியது. அதன் கட்டுமான பணிக்கு ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. இதில் 50 லட்சம் ரூபாய்யை உபயதாரர் இடம் பெற்று தருவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மீதம் உள்ள நிதியை இந்து சமய அறநிலைத்துறை  சார்பாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 2026 தை மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழக்கு நடத்த திட்டம் இடப்பட்டுள்ளது. 


அதே போல சட்டப்பேரவை உறுப்பினர் இந்த தொகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்குளத்திற்கான கோரிக்கை வைத்தார். திருக்குளத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் செலவில் முதன் முதலாக திருக்குளம்  அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கும் கூடுதல் நிதியை கேட்டு இருக்கிறார். கோரிக்கை அடுத்து அந்த இடத்தையும் ஆய்வு செய்தோம் கொடுத்த நிதியை வழங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் திருக்கோவில் திருக்குளம் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொடுப்பது என உறுதி அளிக்கப்பட்டதுள்ளது.


3 கோடி செலவில் பணிகள்


இந்த ஆட்சிக்குப் பிறகு நான்கு திருக்குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். திருக்குளம் சீரமைப்பை பொறுத்தவரை நீர் ஆதாரங்கள் அப்புறப்படுத்துவது ஒருபுறம் என்றாலும் நிலத்தடி நீரை உயர்த்துவது மறுபுறம் என்றாலும் வருகின்ற பக்தர்கள் நேர்த்திக்கடன் திருக்குளங்களை சீர் அமைப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். 220 திருக்குளங்கள் 120 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்துகின்ற பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். திருக்குளங்கள் சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்னதான கூடங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி,  முடிக்காணிக்கை மண்டபம், திருத்தேர் கொட்டகை, மரதேர், தங்கத்தேர், வெள்ளி தேர் பாதுகாப்பு அனைத்திலும் தனி கவனம் செலுத்தி சிறப்பான அனைத்து பக்தர்களுக்கும் ஏற்ப அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.


இதுவரை 13 திருக்கோவில் உள்ள தெய்வத்திற்கு உபயோகம் இல்லாத தங்கங்களை தமிழகம் முழுவதும் 3 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஓய்வு பெற்ற நீதி அரசர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜு ஒரு மண்டலத்திற்கும் ஒரு மண்டலத்திற்கு உயர் நீதிமன்றம் ஒய்வுபெற்ற நீதீபதி மாலா மற்றும் ஒய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முழுவதுமாக அரக்குக்களை நீக்கி சொக்கத் தங்ககளாக மாற்றுவதற்கான அனைத்தையும் வெளிப்படையாக காணொளி மூலமாக பொது மக்களுக்கு நேரில் காண்பித்து தங்கங்களை பிரிக்கும் பணிகள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 13 கோவில்களில் தங்கங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 10 கோவில்களில் பிரிக்கப்பட்ட தங்கங்கள் வைப்பு நிதிக்கு எடுத்து செல்லப்பட்டு 427 கிலோ வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5.30 கோடி ரூபாய் வைப்புத் தொகையின் வட்டியாக கிடைக்கிறது. அந்த வட்டி தொகை அந்தந்த திருக்கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.


இந்த மாதம் மட்டும் மூன்று திருக்கோவில்களில் தங்கங்களை பிரித்து வைத்ததை மத்திய அரசின் ஒரு உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மாசாணி அம்மன் கோவில் 28 கிலோ தங்கம் திருச்சி கோவில் இடத்தில் 12 கிலோ தங்கம் நேற்று பழனியில் 192 கிலோ தங்கம் ஒரு உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 27ஆம் தேதி சமயபுரத்தில் இருந்து 500 கிலோ அளவிற்கு தங்கத்தை மும்பையில் ஒரு உருக்கு ஆலைக்கு அனுப்ப இருக்கிறோம் தொடர்ந்து தங்களை உருக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 23 திருக்கோவில்களில் தங்கம் அறக்கணிக்கு நீதிபதி முன்னிலையில் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. 13 திருக்கோவில்களின் தங்கங்கள் உருக்கு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. 10 ஏற்கனவே உருக்கப்பட்டு வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. 


திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் செல்போன் உண்டியலில் விழுந்தது குறித்தான கேள்விக்கு ; 


நானும் இதுகுறித்து செய்திகளில் படித்தேன். அதுகுறித்து தீர விசாரித்த பிறகு ஒரு முடிவு மேற்கொள்ளலாம். துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். எப்பொழுதுமே உண்டியில் விழுந்து விட்டால் மீண்டும் அதை சாமி கணக்கில்தான் வரவேற்பார்கள் இதற்கு ஏதாவது விதிவிலக்கு இருக்கிறதா என்ன சட்டப்படி ஆராய்ந்து ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்ற நிவாரணம் நிச்சயமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.  அதற்கான சாத்திய கூறிகள் இருப்பின் ஆராயப்படும் என தெரிவித்தார்.