TN Rain Update: சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கடந்த 16ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் திசையில் சற்று வளைந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும். சென்னைக்கு 370 கி.மீ. கிழக்கு – வடகிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு 450 கி.மீ. தெற்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 640 கி.மீ. தெற்கு – தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.
எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
21-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
22-12-2024 முதல் 24-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-12-2024 மற்றும் 26-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்
21-12-2024: மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல், அதனை ஓட்டிய தென்மேற்கு-மத்தியகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-12-2024: மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 ஸ்லோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23-12-2024: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.