அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கைசிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு வருகை தந்தார்.
ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வருகை தந்த அவர் லிப்டில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பின்னர் லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அவருடன் லிப்டில் சுகாதாரத் துறைச் செயலாளர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீன்ஸ் மூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மருத்துவக் கல்வி இயக்குனர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் சக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் இதேபோன்று லிப்ட் பிரச்சனை இருந்தது, அங்கு இருக்கும் 24 லிப்டுகளையும் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 லிப்டுகள் தற்பொழுது மாற்றம் பட்டு இருக்கிறது. அதே பிரச்சனை தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ஏற்பட்டு இருக்கிறது உறுதியாக பழுதடைந்த லிப்டுகளை மாற்றி விட்டு புதிய லிப்ட்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
லிப்ட் சரி செய்கிறார்களா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் பழுதடைந்த லிப்ட்கள் மாற்றி அமைக்கபடும், புதிய லிப்டுகள் அமைக்கபடும் அனைத்து லிப்டுகளும் சரிசெய்யபடும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், விமான நிலையங்களில் rt pcr எடுக்கத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வருவோருக்கு மட்டும் பரிசோதனை செய்து தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும், நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு குடியரசுத்தலைவ ரின் ஒப்புதலுக்கு அனுப்பியனது. அந்த மசோதா மத்திய உள்துறை மற்றும், சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தனர். அதற்கும் உரிய பதில்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. இதனால் விரைவில் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிரிப்பார்க்குறோம் என கூறுனார்.
அரசு மருத்துவமனைகளையும் சேவையையும் குறை கூறுவது எதிர்கட்சிகளின் வேலையாக உள்ளது. அரசு மருத்துவமனைகள் என்பது சாதாரணமானவை அல்ல. தினமும் 10ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறும், எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் பெரிய துறை என சுகாதாரத்துறை அமைச்சர் காட்டமாக தெரிவித்தார்.