சென்னை அண்ணாநகரில் நவீனமயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடி மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்படுள்ள இரண்டு அமுதம் நியாய விலைக்கடை கட்டிடங்களை உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி  திறந்து வைத்து குத்து விளக்கேற்றி அங்காடியினை பார்வையிட்டு விற்பனையை துவக்கி வைத்தார்.


உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உணவுப்பொருள்கள் வழங்கல் துறையின் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,
மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்..


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி ; 


தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க 100 அமுதம் அங்காடி அமைப்போம் என்று கூறினோம் 
இன்று அண்ணா நகரில் அமுதம் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து மாதம் 50 லட்சத்திற்கும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்திற்கு விற்பனையாகிறது அருகிலேயே தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கள் இருந்தாலும் அமுதம் அங்காடியில் விலை மலிவாகவும் தரமாகவும் இருப்பதாலும் வாங்குகிறார்கள்.


அடுத்த கொளத்தூர் தொகுதியிலும் அதற்கு அடுத்தக்கட்டமாக காஞ்சிபுரத்திலும் அமுதம் அங்காடி ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. 
 தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள அமுதம் அங்காடி மேலும் விரிவுப்படுத்தப்படவுளது.


நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வேண்டுகோளின் படி வீடு வீடாக பொருள்கள்களை எடுத்து செல்வது தொடர்பான கோரிக்கைகள் முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது பரிசீலிக்கப்படும் என்றார்.


மேலும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டையை விண்ணபித்தார்கள் அதில் 1.30லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் தயாராகவுள்ளது. மீதமுள்ள 1.70லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும் எனவும் திமுக தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்கள்.


நெல் கொள்முதல் விலையை சொன்னபடி உயர்த்தியுள்ளார்கள் என்றும் தெரிவுத்தார்.


ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களை விட இரு மடங்கள் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள் வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.


பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை உரிய முறையில் பரிசீலனை செய்யப்படும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


லாப நோக்கமின்றி விலைவாசியை கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது 100என்பதோடு இல்லாமல் மக்களின் வரவேற்பினை பொறுத்து மேலும் கடைகள் திறக்கப்படும் எனவும்  தெரிவித்தார்..