சர்வதேச புத்தக கண்காட்சி


தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் கண்காட்சி, இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியாக பரிணமித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.


சென்னை நந்தனம்  ஓஎம்சிஏ மைதானத்தில் சர்வதே புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சர்வதே புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 8 நாடுகள் இந்த சர்வதேச கண்காட்சியில்  கலந்து கொள்கின்றன.  இந்த புத்தகக் காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


"விற்பனைக்கு அல்ல”


இதனை தொடங்கி வைத்த பின் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” இரண்டரை மாதத்தில் இந்த புத்தக கண்காட்சியை நடத்தும் பணிகளை முடித்திருக்கிறோம். தமிழ் இலக்கியங்கள் பார்வைக்காக வைத்துள்ளோம். விற்பனைக்கு அல்ல. அதில் வெளிநாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் தேர்தெடுக்கும் வகையில் இருக்கிறது. திருக்குறளை ஒவ்வொரு மொழியிலும் மொழிப் பெயர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல் தமிழில் சிறந்த 30-50 படைப்புகளை வெளிநாட்டு மொழிபெயர்க்க  கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம்”


"வெளிநாட்டு மொழிகளை சேர்ந்த 50 புத்தகங்களை பெற்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
சர்வதேக புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் அதாவது 18ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர இருக்கிறார்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 


மேலும், தமிழில் உள்ள சிறப்பு படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள சிறந்த புத்தகங்களை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சர்வதேச புத்தகக் காட்சி நடத்தப்பட உள்ளது. என்றார்.


”புதன்கிழமை விடுமுறை இல்லை”


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15ஆம் தேதி தை பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் என ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 18ஆம்  தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று விளக்கமளித்துள்ளார். அந்த வகையில், வரும் 18ஆம் தேதி புதன்கிழமை விடுமுறை இல்லை. அதுபோன்ற எந்த தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.