தமிழர் திருநாள் என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் தை முதல் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். போகி பண்டிகை தொடர்ந்து, தை முதல் நாள் பொங்கலும், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் மூன்றாம் நாள் காணும் பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் தமிழர்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.



 

பண்டிகை நாளை ஒட்டி குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்குதல் பொங்கல் பானை மற்றும் கால்நடை தேவையான அழகுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு என அந்த நான்கு நாட்களும் தங்கள் குடும்பத்தின் உடன் மகிழ்ச்சியை கொண்டாடி வருவர். இந்நிலையில் விடுமுறை நாள் பொழுது போக்காக புதிய திரைப்படங்கள் திரையரங்குகள் வெளிவருவது வழக்கம். அவ்வகையில் இந்த பொங்கல் திருநாள் முன்பே பிரபல திரைப்பட நடிகர்களுக்கான விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் காஞ்சிபுரத்தில் எட்டுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சிறப்பு  வெளியிடப்பட்டது.



 

இந்நிலையில் திரைப்படம் வெளியாவது தொடர்ந்து காஞ்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திரையரங்குகள் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டு சிறப்பு காட்சி திரையிடப்பட்டு முடிவுற்று வெளியே வந்தவர்களுக்கு சிறப்பு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு மேள தாள  முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் அதற்காக காஞ்சிபுரம் திரையரங்கில் பணி புரியும் ஊழியர்கள், திரைப்படங்களை சுவரொட்டி மூலம் பொது மக்களுக்கு அறிய செய்யும் ஊழியர்கள், பேனர் மற்றும் கட்- அவுட் அமைப்பாளர்கள் என பலர் இதற்காக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில் இன்று காஞ்சிபுரம் பாபு திரையரங்க வளாகத்தில், வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கேக் வெட்டி மாவட்ட தலைவர் எஸ் பி கே தென்னரசு தலைமையில் நிர்வாகிகள் கொண்டாடினர்.


 

இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெற்றிக்கு உறுதுணை புரிந்த காஞ்சிபுரம் அனைத்து திரையரங்க  ஊழியர்களுக்கும் பச்சரிசி, வெள்ளம் ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும் பரிசு பணம் அளித்து மகிழ்ச்சியுற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள், மாணவரணி செயலாளர்கள், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.