நாளை முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை  ; 

Continues below advertisement

சென்னை மாநகராட்சியில் 98,523 செல்லப் பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், 55,319 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்களை கடித்து காயப்படுத்தும் நாய்கள்

Continues below advertisement

சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம், அவற்றால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக நாய்க்கு முறையாக தடுப்பூசி, ஓட்டுண்ணி நீக்காதாதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன.

மேலும் நாய்களை வளர்க்க முடியாமல் பலர், அவற்றை சாலையில் திரிய விடுவதும் தொடர்கிறது. இவற்றை தவிர்க்க அனைத்து செல்லப் பிராணிகளையும் பதிவு செய்வது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்தது.

அவ்வாறு பதிவு உரிமம் பெறும் நாய்களுக்கு அக்டோபர் 8 - ம் தேதி முதல், 'மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முகாம் இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது ;

சென்னை மாநகராட்சி இணையதளத்தில் 98,523 செல்லப் பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம்  55,319 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 43,204 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறப்படாமல் உள்ளன. உரிமம் பெற இன்று கடைசி நாள் என்பதால் , அதிகம் பேர் பதிவு உரிமம் பெற வரக் கூடும். ஆனால், மீதமுள்ள அனைவரும் உரிமம் பெற முடியுமா என தெரியவில்லை. அவர்களுக்கு போதியளவு அவகாசம் தரப்பட்டு விட்டது.

ரூ.5,000 அபராதம் 

நாளை முதல் வீடு வீடாக செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகிறதா, அதற்கான உரிமம் பெறப்பட்டுளதா என ஆய்வு செய்யப்படும். அவ்வாறு உரிமம் பெறாத செல்லப் பிராணி உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.