சென்னை மடிப்பாக்கத்தில் அதிர்ச்சி !! வாடகை வீட்டில் பாலியல் தொழில் !! பெண் கைது
சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவுக்கு , கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு 13 - வது மெயின் ரோட்டிலுள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனை செய்தனர்.
அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த மீனா ( வயது38 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு , பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.விசாரணையில் கைது செய்யப்பட்ட மீனா வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மீனா விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சாலையில் நடந்து சென்ற ஹோமியோபதி பெண் மருத்துவரை தவறான நோக்கில் செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது. செல்போன் பறிமுதல். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் , பெண்ணை அவரது செல்போனில் 2 முறை வீடியோ எடுத்து கொண்டிருந்ததாகவும் இதனை கண்ட அப்பெண் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்த காவல் குழுவினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து, அங்கு வந்த தேனாம்பேட்டை காவல் நிலைய குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து பெண் கொடுத்த புகார் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் பகுதியை சேர்ந்த விஜயகுமார் ( வயது 47 ) என்பதும் , பெண்ணை அவரது செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.
அதன் பேரில் பெண் கொடுத்த புகார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.