சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  YES ( Young Entrepreneur school ) தலைவர் நீதி மோகன் , ஒருங்கிணைப்பாளர் நடேசன் , துணைத் தலைவர் ராஜ்குமார் , இணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசியவர்கள் ; 


இளம் தொழில் முனைவோர் மையத்தின் சார்பாக YESCON 2025 மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி மாதம் வரும் 4 , 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்.


இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக , Dr. N.ஜெகதீசன் - தலைவர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ,


திரு.சி.சிவசங்கரன் - நிறுவனர். ஏர்செல்.


பாரதி பாஸ்கர் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் , 


திரு.வி.பார்த்திபன் வரதராஜன், MD, புல் மெஷின்ஸ் லிமிடெட்


திரு எஸ்.முத்துராமன், MD, லட்சுமி செராமிக்ஸ்


திரு கணபதி சங்கரபாஹம், நிறுவனர் & CEO, வஜ்ரா குளோபல் கன்சல்டிங் சர்வீசஸ்.


GRT குழுமத்தின் MD திரு. G. R. ஆனந்தபத்மநாபன் மற்றும் பல நிபுணர்கள்.


கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர். மேலும் , இந்த மாநாட்டில் 2500 க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளதாகவும் , அதே போல் இந்த மாநாட்டில்  Yesmart  கண்காட்சி 270 ஸ்டால்கள் மூலம் அமைக்கப்பட உள்ளதாகவும் இதனை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என கூறினார்.


சிறு , குறு , இளம் தொழில் முனைவோர்களுக்கு பல்துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கும் விதமாக பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.


தங்கள் மையத்தின் முக்கிய நோக்கம் சிறு குறு தொழிலாளர்களை மிகப்பெரிய தொழிலாளர்களாக உயர்த்துவதும் , இதன் மூலம் இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார நாடாக உயர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனக் கூறினார்.