Cyclone Michaung  (மிக்ஜாம் புயல்)


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.


290 முகங்கள் தயார்


செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முன்னேற்பாடாக  290 முகங்கள் தயார் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியுடன் சேர்த்து 390 இடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 மண்டல அலுவலர்கள் 33 மண்டலக்குழு இப்போது அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் காற்றடித்தால் மரங்கள் விழும் என்பதால் அதற்கான 325 மரம் அறுக்கும் இயந்திரங்கள். 191 ஜேசிபி இயந்திரங்கள், 134 ஜெனரேட்டர்கள், 2194 மின்சார துறை அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தாம்பரம் பகுதியில் 25 நபர்களும், கோவலம் பகுதியில் 25 நபர்களும் தங்கி இருக்கிறார்கள்.


மின்மோட்டார் அமைத்து


அதுமட்டுமில்லாமல் வெள்ள பாதிப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் மின்மோட்டார் அமைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இன்று சில பகுதிகளிலும், நாளை அனைத்து பகுதிகளிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதற்கும் எச்சரிக்கையோடு களப்பணியிலே உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் ஈடுபட செய்து அதிகாரிகளும்  தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 7 அம்மா உணவகங்களில் துரிதமாக உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடுகள் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


 குறிப்பாக தண்ணீருக்கு அடியில் சென்று மீட்பு பணியில் ஈடுபடக்கூடிய சிறப்பு பயிற்சி பெற்ற இரண்டு வீரர்களும்   பேரிடர் மீட்பு குழுவில்   இணைக்கப்பட்டுள்ளனர்.  பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான ஏற்பாடுகளை தாம்பரம் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.


 


செங்கல்பட்டு மாவட்ட அவசர உதவி எண்கள்


  மாவட்ட கட்டுப்பாட்டு தொலைபேசி எண் :   044 -27427412,27427414



 வாட்ஸ் அப் எண் : 9444272345


 தாம்பரம் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை


 1800 4251600  


வாட்ஸ் அப் எண்  843835335


 மின்சாரத்துறை சார்பில்  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், கனமழை மற்றும் புயலின் பொழுது ட்ரான்ஸ்பார்மர்  அல்லது வழித்தடங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் தர  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  புயலின் தாக்கத்தை பொறுத்து மின்சாரம் தடை  செய்வதை முடிவெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.   மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில்  94 98 794987  என்ற மொபைல் போன் எண்ணில் 24 மணி நேரம்  புகார்களை தரலாம் என கூறப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் 65 நபர்கள் வரை  புகார்களை பெறுவதற்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மின்வாரியத்திடம் தற்பொழுது  3 லட்சம் கம்பங்கள்  சுமார் 14000 மேற்பட்ட கிலோமீட்டர் கொண்ட மின் கம்பிகள்,  19000 மேற்பட்ட ட்ரான்ஸ்பார்மர் கையிருப்பில் உள்ளன.