சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சீர செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, இன்று ஒருநாள் மட்டும் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தை பயன்படுத்தி கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 






இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அவசரகால பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன. பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாறி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை வழித்தடத்தில் (புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை) மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்கள் அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத சிரமத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.” என தெரிவிக்கப்பட்டது. 


மேலும், “ நீல நிற வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறால் மீனம்பாக்கம் மற்றும் ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில்கள் அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரீன் லைன் வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறி செல்லுங்கள். 






மெட்ரோ ரயில்கள் வார நாள் அட்டவணைப்படி இயக்கப்படும். பச்சை மற்றும் நீல கோடு இரண்டும் சாதாரணமாக செயல்படும்.


பழுதை சரி செய்வதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறி சீர் செய்யப்பட்டதாகவும், அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் எனவும் தற்போது மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.