பராமரிப்பு பணி


 செங்கல்பட்டில் இருந்து நாள்தோறும் 25 -கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள். அதேபோன்று வார இறுதி நாட்களில் சென்னைக்கு,பொருட்கள் வாங்க செல்பவர்களும் பெரும்பாலானோர் மின்சார ரயில் நிலையத்தில் பயன்படுத்துவார்கள். பேருந்து பயணத்தை காட்டிலும் மின்சார ரயில் பயணம் செய்வது  மிகவும் குறைந்த விலை என்பதால் நடுத்தர மக்கள்  பெரும்பாலானோர் மின்சார வாரியங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சார ரயில்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பராமரிப்பு பணிக்காக  செயல்படாமல் போனாலும்  பொதுமக்கள்  அவதி அடைவார்.


பராமரிப்பு பணிகள் ( chennai beach to chengalpattu train cancel )



பொதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது முடிந்த அளவிற்கு மின்சார ரயில்கள் பாதிப்படையாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம்   திட்டமிடும்.  அப்படி ஒரு சில சமயங்களில் முறையாக, தவிர்க்க முடியாத காரணத்தினால் ரயில்கள் வந்து செய்யப்படும் அல்லது தாமதம் முன்னேற்றத்தை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் கொடுப்பது வழக்கம். அந்த வகையில்  சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர்  ரயில்கள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


ரத்து செய்யப்படும் ரயில்கள்


இந்தநிலையில்  சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்  ரயில்கள் பராமரிப்பு காரணமாக,  ஒரு சில ரயில்கள் முழுமையாக   ரத்து செய்யப்படுகிறது.  அதே போன்று ஒரு சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. மே மாதம் 18 ஆம் தேதி வரை  நள்ளிரவு 12.10 முதல் காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படவும் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது .


இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :  பராமரிப்பு காரணமாக நான்கு ரயில்கள் முழுமையாக ரத்து செய்வதாகவும்,  இரண்டு ரயில்கள்   பாதியில் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது  .


 முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்


ரயிலின்   எண்   40135  சென்னை கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள்  இரவு ஒன்பது, பத்து மணி அளவில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  மே 15, 16 மற்றும் மே 17 ஆகிய நாட்களில் இந்த ரயில் இயங்காது.


ரயில் எண்  40150 இரவு 11 :40  மணி அளவில்  தாம்பரத்தில் இருந்து சென்னை பீச் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  இந்த ரயில்  மே 15 16 17 ஆகிய தேதிகளில் இயங்காது.


ரயில் எண் 40001 காலை 4:15 சென்னை கடற்கரையில் இருந்து  தாம்பரம் வரை இயக்கக்கூடிய  ரயில் மே 15 16 17 18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


தாம்பரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் மே 15, 16 ,17 ,18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது


 பாதி வழியில் நிறுத்தப்படும் ரயில்கள்


வண்டி எண் 40572   இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய சென்னை எக்மோர் வரை மட்டுமே இயக்கப்படும்.  மே 15 16 17 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக இந்த  ரயில் ரத்து செய்யப்படுகிறது.


இதேபோன்று  சென்னை கடற்கரையிலிருந்து  அதிகாலை 3 :55  மணியளவில் செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய ரயில்  பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது இது  சென்னை கடற்கரையிலிருந்து இயங்காமல்  சென்னை எக்மோரில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில்  மே மாதம் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.