சென்னை மீனம்பாக்கத்தின் இன்று (12.06.2023) அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது வேலூரில் பதிவான வெப்பநிலையை விட அதிகம் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் முதல் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
நகரின் பிற பகுதிகளில் பதிவான வெப்பநிலை: (டிகிரி செல்சியஸ் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
சென்னை நுங்கம்பாக்கம் - 39.9 கோயம்புத்தூர் -34.4 குன்னூர்-23.0 , கடலூர் -39.8, தருமபுரி- 37.0 ,ஈரோடு-40.2, கன்னியாகுமரி- 33.7,கரூர் பரமத்தி-39.5, காரைக்கால்-38.4, கொடைக்கானல் 20.0, மதுரை விமான நிலையம் -, 39.7, நாகப்பட்டினம்-38.7,நாமக்கல்- 38.0, பாளையங்கோட்டை-38.5, பாம்பன்-34.9, புதுச்சேரி-38.2, சேலம்-38.3, தஞ்சாவூர்-38.0, திருப்பத்தூர்-38.8,திருச்சிராப்பள்ளி-39.5, திருத்தணி40.5, தூத்துக்குடி63.5, வேலூர்-40.3