செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி என்கிற காளிதாசன் வயது 45. இவர் செங்கல்பட்டு வன்னியர் சங்கர் மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் மறைமலைநகர் நகராட்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, ஓலாலா என்கிற தனியார் டீக்கடையில் டீ அருந்துவதற்காக கடைக்கு சென்று டீ அருந்திய போது, திடீரென 2 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் காளியை சரமாரியாக அரிவாளால் வெட்டியும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.


இதில் படுகாயம் அடைந்த காளியை மறைமலைநகர் போலீசார் மீட்டு பொத்தேரி உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது சிகிச்சை பலனின்றி காலி பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மறைமலைநகர் நகராட்சியில் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாமக நிர்வாகியை 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண