தமிழில் மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கிறதா..? - அமைச்சர் சொன்ன பதில் என்ன?

மருத்துவ மாணவர்கள் ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிக்க நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளது. அதற்கான விதிமுறைகள் தளர்தாமல் உள்ளது. அதை எல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

Continues below advertisement

தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

Continues below advertisement

சென்னை சைதாப்பேட்டை சடையப்பன் தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மருத்துவ துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சர் மூலமாக அந்த புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. இன்னமும் கூடுதலான புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

மேலும் இது பற்றிய அறிவிப்பை 21ஆம் தேதி நடைபெற இருக்கக் கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்க இருக்கிறேன்.  

மருத்துவ மாணவர்கள் ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு 

அதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளது. அதற்கான விதிமுறைகள் தளர்தாமல் உள்ளது. அதை எல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்ற கேள்விக்கு

மருந்துகள் பற்றாக்குறை இல்லை முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான Generic medicine விற்பனைக்கு வந்துள்ளது. கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மருந்துகள் கொள் முதல் செய்து தரப்படுகிறது. இதைத் தாண்டி தேவைப்படும் Horlicks மற்றும் Boost  உள்ளிட்ட பொருட்களை கடை நடத்துபவர்கள் அல்லது தனியார் மருத்தகம் நடத்தும் உரிமையாளர்கள் வாங்கி பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற உத்தரவை கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. 

முதல்வர் மருத்தகத்தில் 75 % மருத்துகள் விலை குறைவாக தான் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெறும் 206 வகையான Generic medicine மட்டுமே விற்பனை செய்யப்படுதால் அது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும் இதில் மற்ற மருத்துகளை விற்பனை செய்ய கூட்டுறவு துறையிடம் பேசி வருகிறோம். முதல்வர் மருத்தகத்தில் போதுமான அளவுகள் மருத்துகள் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தில் கூடுதல் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு

6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று கோரிக்கை தொடர்ந்து முதலமைச்சர் சார்பாக வைத்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறோம். வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் வரும்.

நாமக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் புதிதாக இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற கேள்விக்கு

நாமக்கலில் 4  வருடங்களாக மருத்துவர் கல்லூரியில் மாணவர்கள் பயின்று கொண்டிருக்கிறார்கள். பிரதமர் இதனை தொடங்கி வைத்தார். தொடங்கியதில் இருந்து கல்லூரி நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தமிழகத்திற்கு ஆறு மருத்துவ கல்லூரி வேண்டுமென அமைச்சரிடம் விண்ணப்பம் கொடுத்து இருக்கிறோம். ஒப்புதல் கொடுத்த பிறகு தான் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்காக மருத்துவமனை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு

எத்தனை நோயாளிகள் வருகிறார்களோ அனைவருக்கும்  முறையாக கவனிக்கப்படுகிறார்கள் எனவும் வரும் திங்கட்கிழமை புற்றுநோய் தொடர்பாக புதிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

மருத்துவ கல்லூரிகளில் முதல்வர்கள் நிரப்படப்படாமல் உள்ளது குறித்தான கேள்விக்கு

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் முதல்வர்கள் உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் தான் முதல்வர் பணி நிரப்பப்பட்டாமல் உள்ளது. ஆனால் அங்கு அதற்கு பதிலாக அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கும் புதிதாக முதல்வரை நியமிக்க நீதிமன்றம் கடந்த வாரம் தடை நீக்கி இருக்கிறது. விரைவில் அங்கும் முதல்வர் பணி நிரப்பபடும்.

சென்னை மாநகராட்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் குறித்தான கேள்விக்கு

மாநகராட்சி கீழ் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கு நகராட்சி துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். மாநகராட்சி சார்பாக தற்காலிக மருவத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது எனவும் அனைவரும் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். செவிலியர், மருத்துவர் என எந்த காலி பணியிடங்கள் இருந்தாலும் நகராட்சி நிர்வாகம் அதனை மேற்கொள்ளும்.

தனியார் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாகி கொண்டே செல்கிறது அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மருத்துவமனைகள் செயல்பாட்டில் உள்ளதா என்ற கேள்விக்கு

ஏற்கனவே அரசு சார்பாக எழும்பூரில் கருத்தரிப்பு மருத்துவமனை உள்ளது. இரண்டாவதாக மதுரையில் கருத்தரிப்பு மையங்கள் செயல்பட இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய செலவில் பொதுமக்கள் பணம் வாங்கி தான் சிகிச்சை செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது. இதற்கு  7 முதல் 8 லட்சம் வரை செலவாகும்.

செலவே இல்லாமல் இலவசமாக பண்ணிக் கொடுக்கும் பொழுது தான் குறைவான மருத்துவமனை ஆரம்பித்திருக்கிறோம் படிப்படியாக மதுரை, சேலம், கோவை போன்ற பல்வேறு இடங்களுக்கும் வர உள்ளது என தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola