பராமரிப்பு பணி காரணமாக, மின்சார வாரியம் மின்தடை மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றதால், பெரும்பாலான இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின் வினியோக கூட்டத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி 33 கே.வி. துணைமின் நிலையத்தில், நாளை காலை பத்து மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூடுவாஞ்சேரியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் என்னென்ன ?
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் நாளை காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மகாலட்சுமி நகர், நாராயணபுரம், பெரியார் நகர், டி.டி.சி, நகர், ஜவஹர் ஐயா நகர், பிரியா நகர், கணபதி நகர், சீனிவாசபுரம், ரயில் நிலைய சாலை, அம்பேத்கர் நகர், ஜி.எஸ்.டி., சாலை ஒரு பகுதி, கபாலி நகர், பிரியா நகர், கணபதி நகர், சீனிவாசபுரம்,டிபன்ஸ் காலனி, சிற்பி நகர், கன்னியப்பா நகர், காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
நடராஜபுரம், சதுரப்பந்தாங்கல், ராணி அண்ணா நகர், விஷ்ணுப்பிரியா நகர், காமராஜர் புரம், வைகை நகர், பாலாஜி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின்னழுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐயஞ்சேரி, காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம், எம்.ஜி.நகர், அண்ணா நகர், தங்கப்பாபுரம், பெருமாட்டு நல்லூர், மூலக்கழனி, பாண்டூர், நெல்லிக்குப்பம் பிரதான சாலை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்னிறுத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வளவு நேரம் மின்தடை மேற்கொள்ளப்படும் :
பெரும்பாலான பகுதிகளில் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.