சென்னையில் உள்ள மெரினா நீச்சல் குளம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வரும் புதன்கிழமையன்று (ஏப்ரல்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை மெரினா நீச்சல் குளம் மூடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று பரவல் குறைந்ததையெடுத்து, நீச்சல் குளத்தைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது, மேலும், கோடைக்காலம் தொடங்கிவிட்டாதல் மெரினா கடற்கரை நீச்சல் குளம் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், இம்மாதம்1 ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பராமரிப்பு பணி முடிவடையாத காரணத்தால், குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு, 70 லட்ச ரூபாயில் புனரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம், 100 மீ நீளமும், 30 மீ அகலமும் கொண்டது. இங்கு, ஒரே நேரத்தில் 400 பேர் வரை குளிக்கலாம். உடை மாற்றுவதற்கு, 10 அறைகள், கழிப்பறை, குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் போன்ற எல்லா வசதிகளும் இருக்கின்றன.
இது குறித்து மெரினாவி பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நபர் ஒருவர் கூறுகையில், ’ஏப்ரல் 1 ஆம் தேதி அன்றே மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் பராமரிப்பு பணிகள் இருக்கின்றன. உடைந்த டைல்ஸ், மற்றும் குளத்தில் தண்ணீர் நிரப்பும் குழாய்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இன்னும் நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் உள்ளன. வரும் செவ்வாய் கிழமையன்று அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.’ என்றார்.
நீச்சல் குளம் காலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை என வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் நீச்சல் குளத்தில் அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்