ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகன மோதி விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.இதில் உயிரிழந்த ஒருவரின் இரண்டு கண்களையும் தானம் செய்த பெற்றோர்.

 

பணிகளை முடித்துவிட்டு ஒரே வாகனத்தில்...

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் மணிகண்டன் (21) . இவரும் படப்பையில் தங்கியுள்ள திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26)  இருவரும் பனையூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இருவரும் தங்களது பணிகளை முடித்துவிட்டு ஒரே வாகனத்தில் வீடு திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.

 

 



ஒரகடம் காவல் நிலையம் - oragadam police station



 

 

பலத்த காயம் ஏற்பட்டு வலியால்...

 

இந்நிலையில் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் வழக்கம் போல் நிறுவனத்தில் பணிகளை  முடிந்து விட்டு , இரு சக்கர வாகனத்தில் படப்பை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பனையூர் அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் இருவருக்கும் சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் சாலையிலே துடித்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

 

 


ஒரகடம் காவல் நிலையம் - oragadam police station


 

சம்பவ இடத்திலேயே பிரிந்த உயிர்

 

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். விபத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து, தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


சாலை விபத்தில் படுகாயம் மறைந்து உயிரிழந்த மணிகண்டனின் கண்கள் தானம் வழங்கப்பட்ட தற்கான சான்றிதழ்


 

கண்கள் தானம்

 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ,கார்த்திக்குக்கு கடந்த 3ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் மணிகண்டனின் இரு கண்களும் நல்ல நிலைமையில் இருந்ததால், மணிகண்டனின் பெற்றோர் ,  மணிகண்டனின் இரு கண்களையும் தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கார்த்திக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட முழுமை அடையாத நிலையில் மரணம் நடைபெற்று இருக்கும் சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.